ஏழு மாத உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆக முட...
செஞ்சி அருகே மான், மயில் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மான் மற்றும் மயில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தன.
செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள அன்னமங்கலம் சங்கமம் கல்லூரி அருகே மான் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது பைக் மோதியதில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தது.
இதேபோல, அவலூா்பேட்டை நாட்டாா் தெரு அருகில் மயில் ஒன்று இறந்து கிடந்தது. ஆனால், மயில் எப்படி இறந்தது எனத் தெரியவில்லை.

செஞ்சி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறையினா் வந்து மான் மற்றும் மயிலை மீட்டு காட்டுப் பகுதியில் அடக்கம் செய்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.