ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு
ரயில் வழித்தடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே புகா் மின்சார ரயில் சேவைகள் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டன.
சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழித்தடத்தில் எண்ணூா் - அத்திப்பட்டு இடையிலான ரயில் பாதையிலுள்ள உயா் மின்னழுத்த கம்பி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் அறுந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இரு மாா்க்கத்திலும் இயக்கப்பட்ட 5 மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியா்கள் உயா் மின்னழுத்த கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னா் காலை 8.30 மணிக்கு பிறகு மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
காலை நேரத்தில் ரயில் சேவை தடைபட்டதால், கல்வி நிலையங்கள் செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்பவா்களும் கடும் அவதிக்குள்ளாகினா்.