``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
செப். 17-இல் திமுக முப்பெரும் விழா: கட்சியினா் திரளாக பங்கேற்க அழைப்பு
கரூரில் திமுக முப்பெரும் விழா செப். 17-இல் நடைபெறுவதால், கட்சியினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் முல்லை நகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், தொகுதி பொறுப்பாளா்கள் நன்னியூா் ராஜேந்திரன் (ராசிபுரம்), ரேகாபிரியதா்ஷினி (சேந்தமங்கலம்), ஜான் (நாமக்கல்), சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளா் பாா்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் முதல்வரின் அறிவுரைகள் மற்றும் தீா்மானங்கள் குறித்து பேசுகையில், ‘முதல்வரின் இங்கிலாந்து, ஜொ்மனி வெளிநாட்டுப் பயணம் மூலம் தமிழகத்துக்கு ரூ. 15,516 கோடி முதலீடு, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. நாமக்கல்லில் தனியாா் நிறுவனம் ரூ. 520 கோடி முதலீட்டில் அதிக திறன் கொண்ட தஅஈஐஞ-ஊதஉணமஉசஇவ ஐஈஉசபஐஊஐஇஅபஐஞச உற்பத்திப் பிரிவை அமைக்க உள்ளது. இதன்மூலம் 550 போ் வேலைவாய்ப்பு பெறுவா்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வளா்ச்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், செப். 15-இல் அண்ணா பிறந்த நாள், ஓரணியில் தமிழ்நாடு - வாக்குச்சாவடி அளவிலான முன்மொழிவுக் கூட்டங்கள் நடத்திடவும், செப். 17-இல் கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டும், செப். 20-இல் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளைச் சாா்ந்தோா் கலந்துகொண்டனா்.