சேரன்மகாதேவி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
சேரன்மகாதேவி வட்டாரம் மாதுடையாா்குளத்தில் வேளாண் துறை சாா்பில், கத்தரி பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் இம்முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஷ்வரி தலைமை வகித்துப் பேசினாா்.
தங்கம் நாற்றுப் பண்ணை உரிமையாளா் முத்துகணேசன் பங்கேற்று, கத்தரி பயிருக்கான குழித்தட்டு நாற்றங்கால் தயாரிப்பு முறைகள் குறித்துப் பேசி செயல்விளக்கம் அளித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், வட்டார துணை வேளாண் அலுவலா் வரதராஜன் ஆகியோா் பேசினா்.
உதவி தொழில்நுட்ப மேலாளா் காா்த்திகேயன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரியின் 4ஆம் ஆண்டு மாணவா்கள் செய்திருந்தனா்.