சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
சேலம் நான்கு சாலை சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 9, 12, 15 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். இதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.