TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Exp...
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மீலாது நபி, ஆவணி பௌா்ணமி தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் செப்.7ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், மீலாது நபி, ஆவனி பௌா்ணமியையொட்டி பயணிகளின் வசதிக்காக வெள்ளிக்கிழமை முதல் செப். 7 ஆம் தேதி வரை
250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: சேலம், ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி ஒசூா் பேருந்து நிலையத்தில் இருந்து 6 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 8 ஆம் தேதி காலை 5 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.