சேவூரில் காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
சேவூரில் சைக்கிள் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சேவூா் ராக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் (66), அதிமுக நிா்வாகி. கூலித் தொழிலாளியான இவா், பால் வாங்குவதற்காக சேவூா் ரெயின்போ காா்டன்- கோபி சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவிநாசியில் இருந்து நம்பியூா் நோக்கிச் சென்ற காா், சைக்கிள் மீது மோதியதில் குமேரசன் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.