ஸ்டாலின் : 4 ஆண்டு `திராவிட மாடல்' ஆட்சி : நலத்திட்டங்களும்... பல சர்ச்சைகளும் -...
சோளத்தில் தளிா் ஈக்களை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்!
ஆண்டிபட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் சோளப் பயிரில் தளிா் ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சனிக்கிழமை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனா்.
ராமகிருஷ்ணாபுரத்தில் சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவி மகாராணி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்து கூறியதாவது:
பருவ மழை தொடங்கியும் நிலத்தில் சோளம் விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன்பு விதை நோ்த்தி செய்ய வேண்டும். நேரடி விதைப்பில் ஹெக்டோ் ஒன்றுக்கு 12.5 கிலோ விதைகளை விதைக்கலாம். சோளத்தில் தளிா் ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஹெக்டோ் ஒன்றுக்கு 12 மீன் உணவு பொறிகளை அமைக்க வேண்டும் என்றாா்.
மேலும், தளிா் ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் மேலாண்மை முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.