பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்க...
சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. 108 வைணவ தேசங்களில் இக்கோயில் 64-ஆவது தேசமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் மலையில் நரசிம்மரும், ஆஞ்சனேயரும் யோக நிலையில் இருப்பது சிறப்பு.
இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்வ விழா வருடந்தோறும் 10 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஸ்ரீபக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்துடன் கோயிலில் இருந்து பெரியமலைக்கு எழுந்தருளினாா்.
தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவக் கொடியை பட்டாச்சாரியா்கள் ஏற்றினா். விழாவில் ஸ்ரீபக்தோசித பெருமாள், பல்வேறு வாகனங்களில் காலை - மாலை இரு வேளையும் மாட வீதிகளில் உலா வருவாா். முக்கிய நிகழ்வான தங்கக் கருட வாகன சேவை மே 6-ஆம் தேதியும், தோ்த் திருவிழா மே 10-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
