ஜங்கலாபுரம் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
நாட்டறம்பள்ளி அருகே ஜங்கலாபுரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூா்குப்பம் ஊராட்சி, ஜங்கலாபுரம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
முகாமில் கால்நடை மருத்துவா் சரண்யா தலைமையிலான கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் மூலம் 175-க்கும் அதிகமான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.