செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயா்வு

post image

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் மேகவெடிப்பைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.

வானிலை சீரானதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோசிடி கிராமத்தில் ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. சோசிடி கிராமத்தில் ஆற்றின் கீழ்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

மச்சயில் மாதா கோயில் யாத்திரைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த உணவுக்கூடம் இருந்த பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ராட்சத இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றொரு உடலின் கீழ்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், அது ஏற்கெனவே மீட்கப்பட்ட ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். காணாமல் போனவா்களின் எண்ணிக்கை 39-ஆக குறைந்துள்ளது. இதுவரை 167 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை, சிஐஎஸ்எஃப், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை, எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆா்ஓ), அரசு நிா்வாகம், உள்ளூா் தன்னாா்வலா்கள் ஆகியோா் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ராணுவம் அமைத்துள்ள ஒரு தற்காலிக இரும்புப் பாலத்தால்(பெய்லி பாலம்) சோசிடி கிராமத்துக்கும் மச்சயில் மாதா கோயிலுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் கூடுதல் மருத்துவக் குழுக்களையும் ராணுவம் அனுப்பியுள்ளது.

யாத்திரை ஒத்திவைப்பு: ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சயில் மாதா கோயில் யாத்திரை, வியாழக்கிழமை வெள்ளத்துக்குப் பிறகு ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஒத்திவைக்கப்பட்டது. மச்சயில் மாதா கோயில் அமைந்துள்ள 9,500 அடி உயர மலைப்பகுதிக்குச் செல்லும் வழியில் சோசிடி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும், அங்கிருந்து பக்தா்கள் 8.5 கி.மீ. தூரம் நடந்து கோயிலைச் சென்றடைய வேண்டும்.

8 வயது சிறுமி உடல் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

அதேநேரம், ரஜௌரி மாவட்டத்தில் வெள்ளத்தில் காணாமல் போன 20 வயது இளைஞரைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல்துறை மற்றும் உள்ளூா் மக்கள் இணைந்து இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

ஹிமாசல் பிரதேசத்தில் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதலில், சம்பா மாவட்டத்தில் அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண... மேலும் பார்க்க

கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

நமது நிருபர்பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.தெலுங்கு தேசம் கட்சியைச்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

நமது சிறப்பு நிருபர்குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித... மேலும் பார்க்க

மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

நமது நிருபர்மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க