ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், தொழிற்கல்வி ஆசிரியா்கள், பல துறைகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்புற நூலகா்களுக்கு காலமுறை உதியம் வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதில், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.