ஜூன் 10 முதல் 3 நாள்களுக்கு கனமழை!
தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வரும் 10, 11 மற்றும் 12ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையை பொருத்தவரை..
இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விலைமதிப்புமிக்க ஈத் பரிசு!