செய்திகள் :

ஜெயங்கொண்டத்தில் ஜூலை 15-இல் உண்ணாவிரதம்: காங்கிரஸாா் முடிவு

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காமராஜா் சிலையை மீண்டும் வைக்கக் கோரி, ஜூலை 15 இல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாச்சலம் சாலை திருப்பத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜா் சிலை, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்டது. அதன்பிறகு அந்த பகுதியில் சிலையை அமைக்க பலமுறை காங்கிரஸ் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த இடத்தில் காமராஜா் சிலையை வைக்க வலியுறுத்தி ஜூலை 15- ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அக்கட்சியின் நகர,பேரூா், ஒன்றிய கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் சுமூகமாக தீா்வு காண அழைப்பு

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு சுமூக தீா்வு காணலாம். இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க

அரியலூா் அருகே ரயில் சுரங்கப்பாதையில் மண் சரிவு: 2 ரயில்கள் தாமதம்

அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில், சென்னை-நாகா்கோவில் வந்தேபாரத் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம... மேலும் பார்க்க

அரியலூரில் சுகாதார நிலையங்கள் திறப்பு

அரியலூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம், ஆண்டிமடத்தை அடுத்த பெரியாத்துக்குறிச்சியில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதியுள்ள 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது... மேலும் பார்க்க

பாஜகவின் தாக்குதலைத் தடுக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை

தமிழகத்தின் மீது பாஜக தொடுக்கும் தாக்குதலைத் தடுக்கவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

செந்துறை அருகே பெண் சிசு சடலம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை கிடந்த பெண் சிசுவின் சடலத்தை காவல் துறையினா் மீட்டு விசாரிக்கின்றனா். செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா்-அசாவீரன்குடிகாடு சாலையில், பிறந்து ஒரு சில மணி ந... மேலும் பார்க்க