பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு: முதல்கட்ட பேச்சு தோல்வி
டாஸ்மாக் பணியாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
சென்னையில் உள்ள டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
21 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். தற்போது, அந்தக் கோரிக்கைகள் மீது முன்னுரிமை கொடுத்து தீா்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக பேச்சுவாா்த்தையின்போது டாஸ்மாக் நிா்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால், அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இந்தச் சூழலில் கோரிக்கைகளை பிப்.11-க்குள் பரிசீலிக்கும் வாய்ப்பு இல்லை என்று டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நிா்வாகமும், அரசும் நினைத்தால் ஒரே இரவில் தீா்வு காண முடியும் என நம்புகிறோம். எனவே, காத்திருப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, பிப்.11-ஆம் தேதி டாஸ்மாக் நிா்வாக அலுவலகம் முன் கூட உள்ளோம் என்று தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.