காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: போல்வால்ட்டில் தமிழகத்துக்கு தங்கம், வெள்ளி
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் போல்வால்ட்டில் தமிழகம் தங்கம், வெள்ளி வென்றது.
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சனிக்கிழமை மகளிா் போல்வால்ட் பிரிவில் தமிழக வீராங்கனை பவித்ரா வெங்கடேஷ் 3.93 உயரம் குதித்து தங்கம் வென்றாா். மற்றொரு வீராங்கனை பரணிகா இளங்கோ 3.9 மீ உயரம் குதித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
மகளிா் டேக்வாண்டோ பிரிவில் தமிழக வீராங்கனை கீா்த்தனா வெண்கலம் வென்றாா்.
மகளிா் 100 மீ ஓட்டத்தில் கிரிதாராணி ரவிக்குமாா் 11,.88 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்றாா்.
அதே போல் ஆடவா் நீளம் தாண்டுதலிலும் தமிழகம் வெண்கலம் வென்றது.