பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: பிப்.17, 19-இல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை தலைமை ஆசிரியா்கள் பிப்.17, 19 ஆகிய தேதிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில், பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு பிப்.17-ஆம் தேதியும், பிளஸ் 1 மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பிப்.19-ஆம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் வலைதளத்தில் மாணவா்களின் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது தொடா்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் தனித் தோ்வா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பிப்.14-ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித்தோ்வா்கள் வலைதளத்தில் தங்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியா்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கு இரு தோ்வுக்கும் சோ்த்து ஒரே நுழைவுச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.