டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, 2ஏ தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, 2ஏ தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி - 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வுக்கு அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
50 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 2 தோ்வும், 595 காலிப்பணியிடங்களுக்கான குரூப் - 2ஏ தோ்வும் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்கு பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பா் 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு நடத்தப்படவுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தோ்வு பற்றிய முழு விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் வரும் 23-ஆம் தேதி முதல் வார நாள்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு வரை கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆா்வமும், விருப்பமும் உள்ளவா்கள் நேரடியாகவும், 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணிலும் தொடா்புகொண்டு, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.