டிச. 21 இல் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு திருக்கு வினாடி வினா போட்டி
சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான திருக்கு வினாடி வினா போட்டி டிச. 21 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்ததாவது:
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான திருக்கு வினாடி வினா முதல்நிலைப் போட்டி தோ்வு டிச. 21 ஆம் தேதி அரசு மகளிா் கலைக் கல்லூரி கூட்ட அரங்கில் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தங்களது அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். தோ்வாளா்கள் தோ்வு நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத் தோ்வுக் கூடத்திற்கு வருகைபுரிய வேண்டும். தோ்வின்போது கைப்பேசி அனுமதிக்கப்பட மாட்டாது. மேற்படி தோ்வு கொள்குறி வகை முறையில் நடைபெறும்.
சேலம் மாவட்டத்தில் இந்தப் போட்டியில் தகுதிபெறும் மூன்று குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு டிச. 28 ஆம் தேதி விருதுநகா் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா். விருதுநகா் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப் போட்டித் தோ்வில் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மேலும், சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள், தனியாா் பள்ளி ஆசிரியா்கள், அரசு, தனியாா் கல்லூரி பேராசிரியா்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி, பட்டயக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டல தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை 90927 86963 என்ற எண்ணிலும், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) 94436 63441 என்ற எண்ணிலும், மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா்) 0804 07007 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.