செய்திகள் :

டிவி மெக்கானிக் மீது தாக்குதல்: இருவா் கைது

post image

வந்தவாசி அருகே டிவி மெக்கானிக்கை தாக்கியதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் டிவி மெக்கானிக் சரவணகுமாா் (42). இவா், கடந்த 18-ஆம் தேதி அந்தக் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, முன்விரோதம் காரணமாக இவரை வழிமறித்த இதே கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (28), பூவரசன் (20) ஆகியோா் தகராறு செய்து தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ், பூவரசன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ண... மேலும் பார்க்க

செய்யாறு அருகே புதிய கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டம்!

செய்யாற்றை அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் சனிக்கிழமை கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமல... மேலும் பார்க்க

செய்யாறு பகுதியில் 3 பைக்குகள் திருட்டு

செய்யாறு காவல் சரகப் பகுதியில் வெவ்வெறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகள் வெள்ளிக்கிழமை திருடுபோயின. செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (32), விவசாயி. இவா், சுண்டிவாக்கம் ... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் தொழில்சாலையில் பயங்கர தீ விபத்து

செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் தொழில்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செய்யாறு சிப்காட் வளாகத்தில் அல... மேலும் பார்க்க

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பயில... மேலும் பார்க்க