Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
டெல்லி பயணம்: செங்கோட்டையனுடன் சந்திப்பா? - நயினார் நாகேந்திரன் கூறிய பதில்!
இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக போராடுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் நசுக்குகிற அரசாங்கமாக செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது" என்று பதிலளித்தார்.
அதைத்தான் கேட்டுதான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர், பின்னர் போராட்ட இடத்தை மாற்றி, மதுரையில் போராட்டம் நடத்தினர்.
இந்த அரசாங்கம் போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்குகிற அரசாங்கமாக இருந்துவருகிறது.
உதாரணமாக, எங்கள் சிறுபான்மையினர் அணியைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம், ஒரு மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு என்ன வழிமுறை என்று கேட்டார்.
அதற்கு அவர்மேல் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்து, இன்று கடலூர் சிறைக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல், கடந்த அவர், "அதிமுக எங்கள் கூட்டணியில் உள்ள கட்சி. அதன் பொதுச்செயலாளர் நீக்கிய ஒருவரை நான் சென்று சந்திக்க முடியாது," என்றார்.
மேலும், வரும் 11-ம் தேதி டெல்லி செல்வதையும் உறுதி செய்தார். அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களை பாஜக தூண்டிவிடுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு, "இது எல்லாவற்றையும் தூண்டிவிடுவது திமுக தான்," எனப் பதிலளித்தார்.