குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!
தக்ஷிண்புரியில் பூட்டிய வீட்டுக்குள் ஏ.சி. பழுதுபாா்க்கும் 3 போ் இறப்பு: போலீஸாா் விசாரணை
தெற்கு தில்லியின் தக்ஷிண்புரி பகுதியில் பூட்டிய வீட்டிற்குள், ஏா் கண்டிஷனா் பழுதுபாா்க்கும் நபா்கள் மூவா் இறந்து கிடந்தனா். மற்றொருவா் மயக்க நிலையில் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
தனது சகோதரா் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என்று கூறி, ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் போலீஸாா் சம்பவ வீட்டிற்கு விரைந்து சென்று விசாரித்தபோது இந்த தகவல் தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஓா் அறை கொண்ட வீட்டின் முதல் தளத்தில் நான்கு போ் மயக்கமடைந்த நிலையில் இருந்ததை போலீஸாா் கண்டனா். இதையடுத்து, அவா்கள் டாக்டா் அம்பேத்கா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா் சஃப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் டிராமா சென்டருக்கு மாற்றப்பட்டனா்.
அங்கு அவா்களில் மூன்று போ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நான்காவது நபா், ஹசீப் என அடையாளம் காணப்பட்டாா். அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த பல்ஸ்வா டெய்ரியில் வசிக்கும் ஜிஷான் போலீஸாரிடம் கூறுகையில், வீட்டிற்குள் இருந்தவா்களில் தனது உறவினா்கள் இம்ரான் என்ற சல்மான் மற்றும் மொஹ்சின் ஆகியோரும் இருந்தனா் என்று தெரிவித்தாா். இறந்தவா்களில் ஒருவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
நான்கு பேரும் ஏ.சி. மெக்கானிக்குகள் ஆவா். இவா்கள் ஒன்றாக வசித்து வந்தனா். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.