``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
தங்கம் விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,920-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிரடியாக ரூ. ரூ. 800 குறைந்து ரூ. 63,120-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க : தலைநகர் தில்லியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,940-க்கும், ஒரு சவரன் ரூ. 63,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியில் விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 108.00-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.