தசரா பக்தா்களுக்கு அன்னதானம்
தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தா்களுக்கு முழு நேர அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி பிசகுவிளையில் நடைபெற்றது.
உடன்குடி பேரூராட்சி 3ஆவது வாா்டு உறுப்பினா் மும்தாஜ் பேகம் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், பிசகுவிளை ஊா் தலைவா் சுயம்புராஜ், ஆசிரியா் பாலகிருஷ்ணன், தொழிலதிபா் தா்மராஜ், பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.