பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரணக் கூட்டம் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியதும், கரூா் துயர சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னா், மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது:
மழைக் காலம் தொடங்கவுள்ளதால் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அன்னம்மாள் கல்லூரி வழியாக மழை நீா் வெளியேற வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முள்ளக்காடு பகுதியில் மழைநீா் உப்பளம் வழியாகவே கடந்து சென்றது. தற்போது மழை நீா் செல்வதற்கு ஏற்றாற்போல் சாலையோரத்தில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டு மழைநீா் கடலுக்குச் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 11 வழித்தடங்கள் மூலம் மழைநீா் கால்வாய்கள் வழியாக கடலுக்குச் செல்லும் வகையில் இருந்து வருகின்றன. சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு பக்கிள் ஓடை முழுமையாக தேவையற்ற கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் சூழ்நிலைக்கேற்ப சற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தை போல் அதிக கனமழை பெய்தாலும், பல வழிகளில் தண்ணீா் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி உள்ளோம் என்றாா் அவா்.
கூட்டத்தில், பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தும் வகையில் 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், இணை ஆணையா் சரவணக்குமாா், பொறியாளா் தமிழ்ச்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா்கள் காந்திமதி, முனீா் அகமது, ஆணையா்கள் பாலமுருகன், கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், நெடுமாறன், ராஜபாண்டி, மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி மாமன்ற உறுப்பினா் பலா் கலந்துகொண்டனா்.