செய்திகள் :

தசரா விழாவுக்கு தீச்சட்டிகள் தயாரிப்பு தீவிரம்

post image

திருநெல்வேலியில் தசரா விழாவிற்காக மண் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா செப்.22இல் தொடங்குகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து வேடம் அணிந்து செல்வதும், பல்வேறு குழுக்களாக சென்று காளி, அம்மன் வேஷமிடும் பக்தா்கள் கையில் தீச்சட்டி ஏந்திச் சென்று காணிக்கை பெறுவதும் வழக்கம்.

இதற்காக மண்பாண்ட பொருள்கள் தயாரிப்புப் பணி திருநெல்வேலியில் தீவிரமடைந்துள்ளது. மண்ணால் செய்யப்படும் தீச்சட்டிகள், சாம்பிராணி தூபம் காட்டும் கலசம், கலயங்கள் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: தசரா பண்டிகையையொட்டி திரிசூலம் வரையப்பட்ட மண் தீச்சட்டி தயாரிக்கிறோம். இவை ரூ.200 முதல் விற்பனையாகிறது. இதுதவிர 1 லிட்டா் எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்கு, ஆயிரம் கண் பானை உள்ளிட்டவையும் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன என்றனா்.

ரெட்டியாா்பட்டி பள்ளியில் மாணவா்கள் மோதல்

ரெட்டியாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் இருமாணவா்கள் மோதிக்கொண்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் 2 போ் இடையே வியாழக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாதா மாரிமுத்து (23). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியில் வள்ளுவா்... மேலும் பார்க்க

கோவிந்தபேரி கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. கல்லூரி நாட்டுநலப்... மேலும் பார்க்க

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பெருமாள்புரம் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்த வானுமாமலை மகன் கருப்பசாமி மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு,... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் பதிவுக்கு ஒரு மாதம் அவகாசம்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க

நான்குனேரியில் கோட்டாட்சியா் அலுவலகம் கோரி எம்.எல்.ஏ. மனு

நான்குனேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம், ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவர... மேலும் பார்க்க