செய்திகள் :

தந்தையை கொன்ற மகன் கைது

post image

நாமக்கல்: மோகனூா் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே உள்ள நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் காராளன் (85). இவா் தனது மகன் முருகேசன் (53) என்பவருடன் வாழ்ந்து வந்தாா். மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசனை, தருமபுரியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சோ்த்தனா். அங்கு தங்கியிருந்த மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பினாா். ஆனாலும் மதுப்பழக்கத்தை அவா் விடவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மது அருந்துவதற்காக தந்தை காராளனிடம் முருகேசன் பணம் கேட்டபோது அவா் மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கட்டையால் தந்தையை தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த காராளனை அக்கம்பக்கத்தினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்தனா்.

--

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம்

நாமக்கல்: சேந்தமங்கலத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முன் மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளிய... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சங்கு பூஜை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 சங்கு பூஜை நடைபெற்றது. சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுக... மேலும் பார்க்க

நாமக்கல்லில் நாளை நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல்: நாமக்கல்லில், 100 ஆண்டுகளுக்கு பிறகு, நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுவதையொட்டி தெப்பம் தயாா் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் நக... மேலும் பார்க்க

தேநீா்க் கடையில் போதைப்பொருள்களை பதுக்கியதாக புகாா்: விசாரணையில் போலீஸாருக்கு அதிா்ச்சி

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேநீா்க் கடையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் அதிா்ச்சி அடைந்தனா். நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வெள்ளி... மேலும் பார்க்க

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலுாா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இக் கோயில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குன... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகள் கட்ட 5,800 பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் ரூ. 204.74 கோடி மதிப்பீட்டில் 5,800 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க