குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
தனியாா் நிறுவன காவலருக்கு மிரட்டல்: சிறாா் உள்ளிட்ட 3 போ் கைது
கோவில்பட்டியில் தனியாா் நிறுவன காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறாா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி மகன் மாடசாமி (40). தனியாா் நிறுவனத்தில் காவலராக வேலை பாா்த்து வரும் இவா், கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த வீட்டில் தண்ணீா் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே வீட்டைச் சோ்ந்த இசக்கி மகன் பட்டமுத்து (28), வீரவாஞ்சி நகா் 8ஆவது தெருவைச் சோ்ந்த ரமேஷ் கண்ணன் மகன் ஆனந்தகுமாா் (25) மற்றும் 17 வயது சிறுவா் ஆகிய 3 பேரும் மாடசாமி வீட்டிற்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று, அவரை அழைத்து அவதூறாகப் பேசி சட்டையைப் பிடித்து இழுத்து கத்தியால் குத்தி, காலால் மிதித்தாா்களாம்.
இதில், காயமடைந்த மாடசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறாா் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.