தனியாா் பேருந்து மீது கல்வீச்சு: கண்ணாடி சேதம்
பழனியில் கல் வீசி தாக்கப்பட்டதில் தனியாா் பேருந்தின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.
பழனியிலிருந்து ருத்ராபாளையம் நோக்கி திங்கள்கிழமை மாலை தனியாா் நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்த போது சாலையோரம் நின்றிருந்த ஒருவா் அந்தப் பேருந்து மீது கல்வீசி தாக்கினாா்.
இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. தகவலறிந்து அங்கு வந்த பழனி தாலுகா போலீஸாா் பேருந்து மீது கல்வீசிய நபா் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
முதல் கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நபா் மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சுற்றிவருபவா் என தெரியவந்ததுள்ளது. சாலையில் சென்ற பேருந்து மீது கல்வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.