தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவிகள் பேரணி
திருவாரூா்: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் கல்லூரி மாணவிகள் சாா்பில் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தனியாா் கல்லூரி மாணவிகள் பேரணியாகச் சென்றனா். திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பழைய ரயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.
தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்திக்கொண்டு, மாணவிகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என முழக்கங்களை எழுப்பியபடி பேரணியில் சென்றனா்.