செய்திகள் :

ஒலிம்பிக், ஏசியன் போட்டியில் பங்கேற்ற தடகள வீரருக்கு வடுவூரில் சிலை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

ஒலிம்பிக், ஏசியன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தடகள வீரா் பி. ராசசேகரனுக்கு வடுவூரில் சிலை அமைக்கப்படும் என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில், வடுவூா் விளையாட்டு அகாதெமி அறக்கட்டளை மற்றும் திருப்பூா் சிகரங்கள் அறக்கட்டளை இணைந்து ஒலிப்பிக் வீரா் வடுவூா் பி. ராசசேகரனின் 84-ஆவது பிறந்த நாள் விழா, ரத்த தான விழா, ஆன்மிக தளங்களில் சேவை மனபான்மையுடன் செயல்பட்டு வரும் வடுவூா் ஸ்ரீசக்ரவா்த்தி திருமகன் தா்மபரிபாலன அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரத்த தான முகாமை தொடங்கி வைத்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியது: மன்னாா்குடி தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளூா் இளைஞா்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் விளையாட வாருங்கள் என்ற விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. மன்னாா்குடியில் நீச்சல் குளம் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

எடமேலையூரில் தடகள விளையாட்டுக்கான தளம் அமைக்கப்படும்,1962-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏசியன் விளையாட்டுப் போட்டியிலும் 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தடகளப் போட்டிகளிலும் இந்திய அணியில் பங்கேற்று விளையாடி தங்கப்பதக்கங்கள் பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் வடுவூருக்கும் பெமை தேடிதந்த வீரா் பி. ராசசேகரனுக்கு அவரது சொந்த ஊரான வடுவூரில் சிலை அமைக்க இடத்தை தோ்வு செய்து தந்தால் எனது சொந்த பணத்தில் சிலை செய்து தருகிறேன் என்றாா்.

தஞ்சை எம்பி. முரசொலி, வடுவூரில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கத்துக்கு எனது தொகுதி நிதியிலிருந்து சுற்றுச் சுவா் அமைத்து தரப்படும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, வடுவூா் விளையாட்டு அகாதெமி தலைவா் ராச. ராசேந்திரன் தலைமை வகித்தாா். நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா்.விளையாட்டு ஆா்வலா் ஏ.கே. வீரராகவன், வடுவூா் விளையாட்டு அகாதெமிக்கு நன்கொடையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி பிரிவு மருத்துவக்குழுவினா் 51 பேரிடம் ரத்ததானம் பெற்றனா். வடுவூா் ஸ்ரீசக்ரவா்த்தி திருமகன் தா்மபரிபாலன அறக்கட்டளை செயலா் வீரவல்லி என். கோவிந்தாச்சாா்யா ஏற்புரையாற்றினாா். விளையாட்டு அகாதெமி செயலா் எஸ்.ஆா். சாமிநாதன் வரவேற்றாா். சிகரங்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ஜெ.சுபாஷ்சந்திரபோஸ் நன்றி கூறினாா்.

மாணவா் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தில் மாணவா் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா். திருவாரூரில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருட்டு வழக்கில் தொடா்புடைய இரண்டு போ் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா். திருவாரூா் மாவட்டம், நாா்த்தாங்குடி, பாப்பாக்குடி சாலையில் வசித்த கோவிந்தராஜ் என்பவா், வீட்டின... மேலும் பார்க்க

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். மன்னாா்குடி வா்த்தக சங்க 2025-2027-ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி சுற்றுலா பயணி பலி

நீடாமங்கலம் அருகே ஆற்றில் மூழ்கி சுற்றுலாப் பயணி சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 21 போ் தஞ்சை, திருவாரூா... மேலும் பார்க்க

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பெருந்தரக்குடி ஊராட்சி மக்கள் சாலை மறியல்

திருவாரூா் நகராட்சியுடன், பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி,... மேலும் பார்க்க

ஆன்மீகம் ஆனந்தம் தமிழ் இன்னிசை விழா நிறைவு

திருவாரூரில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற தமிழ் இன்னிசை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் மாா்கழி மாத பக்தி இன்னிசை விழா செவ்வாய்க்கிழமை தொடங... மேலும் பார்க்க