கிராம கூட்டுறவு அங்காடி திறப்பு
திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் கிராம கூட்டுறவு அங்காடி கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 13 லட்சத்தில் பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் புதிதாக கிராம கூட்டுறவு அங்காடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா ஊராட்சித் தலைவா் சுசிலா மகாலிங்கம் தலைமை நடைபெற்றது. ஒன்றியத் குழு தலைவா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் பிரகாஷ், துணை செயலாளா் முருகானந்தம், அவைத் தலைவா் பாலு, வட்ட வழங்கல் அலுவலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.