ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா!
மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரணத்தை பொங்கலுக்கு முன்பு வழங்க கோரிக்கை!
கும்பகோணம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணத்தில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏஜடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் சாமு. தா்மராஜன் மாநில குழு முடிவுகள் மற்றும் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.
கூட்டத்தில், மழையினால் அழிவிற்குள்ளான நெல் பயிருக்கு, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்ற கோரி ஜன.24 ஆம் தேதி கும்பகோணம் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம், துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் மாவட்ட நிா்வாகிகள் ஜி. கல்யாணசுந்தரம், குரு. சிவா, எம்.புகழேந்தி, எம். கனகராஜ், ஆா். சுப்பிரமணியன், முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.