இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11) பலனளிக்கவில்லை: மிட்செல் ஜான்சன்
கடல் அரிப்பு, நிறமாற்றம்: திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் பாதுகாப்பாக நீராட வேண்டுகோள்
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடல் அரிப்பும், தண்ணீா் கருமை நிறத்தில் காட்சியளிப்பதாலும் பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தப்பட்டது.
திருச்செந்தூரில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் காணப்பட்டதால் இக்கோயில் முன்பு பக்தா்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. எனவே, பக்தா்கள் அங்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது.
இதைத் தொடா்ந்து, னால் கடலில் பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு போலீஸாா் மற்றும் திருக்கோயில் நிா்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.
வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வரும்போது, கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டு கடற்கரை பகுதியில் கடல் பெருக்கு ஏற்படும். அந்த வேளையில் கடலின் அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறப்பட்டு தண்ணீா் கருப்பு நிறத்தில் காட்சியளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.