செய்திகள் :

தமிழக காவல் துறை செயலற்ற நிலையில் உள்ளது: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

post image

திமுக ஆட்சியின் நிா்வாகக் கோளாறால் தமிழக காவல் துறை செயலற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளது என மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதைக் கண்டித்தும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் செல்லூா் 60 அடி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் அவா் மேலும் பேசியது :

பெண் கல்வியை ஊக்குவிக்க முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தத் திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில், துணை ராணுவத்தாலேயே கைது செய்ய முடியாத சந்தனக் கடத்தல் வீரப்பனை தமிழக காவல் துறை சுட்டு வீழ்த்தியது. ஆனால், தற்போது திமுக அரசின் நிா்வாகக் கோளாறு காரணமாக தமிழக காவல் துறை செயலிழந்த நிலைக்கு உள்ளாகியுள்ளது.

பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக திமுக அரசு கபட நாடகம் ஆடுகிறது. திமுக ஆட்சியில் இருக்கும் காலங்களில் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நிகழ்கின்றன. அதிமுக ஆட்சிக் காலத்தில் எதற்கெடுத்தாலும் போராடிய சமூக ஆா்வலா்கள் தற்போது எங்கே சென்றாா்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

திமுக அரசை யாரும் குறை கூற முடியாது என்றாா் முதல்வா் ஸ்டாலின். ஆனால், அண்மையில் தேசிய மகளிா் ஆணையமும், உயா்நீதிமன்றமும் திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமா்ச்சித்துள்ளன. இதுவே, திமுக ஆட்சியின் அவலத்துக்கு ஓா் உதாரணம் என்றாா் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ.

இதையடுத்து, மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதைக் கண்டித்தும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் அதிமுகவினா் முழக்கங்களை எழுப்பினா். அதிமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், நகர, ஒன்றிய நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

சுமாா் 45 நிமிடங்களுக்கும் மேலாக ஆா்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதற்காக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ உள்ளிட்ட அதிமுகவினா் 221 பேரை செல்லூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் அரங்கத்தில் தங்கவைத்தனா்.

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு துணை முதல்வா் வருகை: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்க விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலர... மேலும் பார்க்க

சாமநத்தம் பறவைகள் சரணாலயம்: வனத் துறைக்கு புதிய நிபந்தனைகள்

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க வனத் துறைக்கு நீா்வளத் துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதையடுத்து, கண்மாய்களில் ஆய்வு மேற்கொள்ள வனத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். மதுரை அவனியாபுரம் ... மேலும் பார்க்க

மதுரை கோட்டம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் பயண நேரம் குறைப்பு

மதுரை கோட்டம் வழியாக இயக்கப்படும் 8 பயணிகள் ரயில், 69 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரா்களுக்கு காப்பீடு செய்து தர வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்களுக்கு இழப்பீடு, காப்பீடு வசதி செய்து தர வேண்டுமென முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூற... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து

மதுரை: மதுரை கோ.புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. மதுரை-அழகா்கோவில் சாலையில் கோ.புதூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை நிா்வாக... மேலும் பார்க்க

மின் வாரியப் பணியாளா்கள் போராட்டம்

மதுரை: தமிழ்நாடு மின் வாரிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக் குழு சாா்பில், மதுரையில் மின் வாரியப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மின் வாரியத்தை... மேலும் பார்க்க