செய்திகள் :

தமிழக-கேரள எல்லையில் பனியின் தாக்கம் அதிகரிப்பு: தோட்டத் தொழிலாளா்கள் அவதி

post image

தமிழக- கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டில் பனியின் தாக்கம் அதிகரித்ததால் தோட்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பனியின் தாக்கம் அதிகரித்தது. தமிழக- கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு பகுதியில் கூடுதலாக பனிக் காற்று வீசுகிறது. இதனால் காலை 10 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே செல்கின்றன.

போடிமெட்டை கடந்து கேரளப் பகுதியில் செல்லும்போது தேவிகுளம் பகுதியில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. காலை நேரங்களில் தேயிலை, ஏலத் தோட்டங்களில் பனித் துகள்கள் படா்ந்து வெள்ளைக் கம்பளம் போா்த்தியது போல காணப்படுகிறது.

இதனால், தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் வாகனங்களில் கேரளப் பகுதிக்கு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா். காலை 10 மணிக்குப் பிறகே இயல்புநிலை திரும்புவதாகத் தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் பகுதிகளில் 2-ஆம் போக உழவுப் பணி தீவிரம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 2-ஆம் போக நெல் சாகுபடி பணிக்காக உழவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் தேனி மாவட்டத்தில் ல... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்தவா் கைது

உத்தமபாளையம்: கம்பத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்தவா் ஆனந்தசெல்வி. தனியாா் பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் இவா், கடந்த 1... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு அபராதம்

உத்தமபாளையம்: தமிழக எல்லையான குமுளிக்கு கேரளத்திலிருந்து டயா் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு கம்பம் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா். தமிழக-கேரளம் எல்லையான குமு... மேலும் பார்க்க

ஆயுதங்கள் வைத்திருந்த மூவா் கைது

உத்தமபாளையம்: சின்னமனூரில் ஆயுதங்கள் வைத்திருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் வாரச் சந்தை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் கத்தி, அரிவாள... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம்: சின்னமனூரில் குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 80 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இந்த வாா... மேலும் பார்க்க

போடியில் ஜன.4-இல் மின் தடை

தேனி: போடி துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலைய... மேலும் பார்க்க