பெண்ணிடம் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்தவா் கைது
உத்தமபாளையம்: கம்பத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கம்பத்தைச் சோ்ந்தவா் ஆனந்தசெல்வி. தனியாா் பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் இவா், கடந்த 11-ஆம் தேதி வழக்கம் போல, வேலை முடிந்து இரவு வீடு திரும்பினாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவா் அவரது கழுத்திலிருந்த தங்தச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, கம்பம் திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செந்தில்வேலவன் (44) இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து. அவரிடமிருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.