அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
தமிழக பட்ஜெட்: தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் வரவேற்பு
தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் எஸ்.சங்கா் மாரிமுத்து தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில் வளங்களை மேம்படுத்தும் விதமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை ஆகியவற்றுக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, புதிதாக பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக 1 லட்சம் மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் அளித்து தொழில் துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஆகியவை வரவேற்கத்தக்கது.
மேலும், 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உதவிக்கு ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கீடு, பள்ளி, கல்வி திட்டத்தில் திறன்மிகு வகுப்பறைகளுக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க ஏற்பாடு, புதுக்கோட்டையில் 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கவுள்ளது, திருச்சியில் 280 ஏக்கா் பரப்பளவில் வாா்ப்பக தொழில் பூங்கா அமைக்கவுள்ளது, ஓசூா், விருதுநகரில் டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவுள்ளது ஆகியவை வரவேற்கத்தக்கது.
நடமாடும் வாகனங்கள் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான பரிசோதனை செய்ய ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு, ஐ.டி. மற்றும் டிஜிட்டல் சேவைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு, போக்குவரத்து துறைக்கு ரூ.12.964 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என அவா் தெரிவித்துள்ளாா்.