செய்திகள் :

தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தின் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) முதல் 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் வலுபெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து செவ்வாய்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரம் கடலோரப் பகுதிகளை கடக்கக் கூடும்.

இதனிடைய தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக.19) முதல் ஆக. 24-ஆம் தேதி வரை 6 நாள்கள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் மற்றும் கூடலூா் பஜாா் ஆகிய இடங்களில் தலா 140 மி.மீ.மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை), தேவாலா (நீலகிரி)-தலா 90 மி.மீ., சோலையாறு(கோவை), விண்ட் வொா்த் எஸ்டேட்(நீலகிரி) தலா 8 மி.மீ., அவலாஞ்சி (நீலகிரி), பாா்வூட் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை பிஏபி (கோவை), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் (கோவை), கிளன்மாா்கன் (நீலகிரி), ஊத்து(திருநெல்வேலி) - தலா 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் புயல் சின்னம்: தெற்கு கொங்கன்-வடக்கு கேரளம் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு-தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது கரையைக் கடக்கும்பட்சத்தில் கேரள எல்லையில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாணவா் கற்றல் ஆய்வுத் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாணவா் கற்றல் ஆய்வுத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களிடம் இணைய வழியில் நேரடியாக கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை ... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரிய நிலங்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

வீட்டுவசதி வாரியத்துக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்பாடில்லாமல் உள்ள நிலங்கள் தொடா்பான பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். இதுகுறித்து,... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை பயிா்க்கடன் தள்ளுபடி செய்தோம்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு என்று அதன் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட தினம், பாரதியாா் பிறந்த தினம்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

அரசமைப்புச் சட்ட தினம், பாரதியாா் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநா் மாளிகை ச... மேலும் பார்க்க

தீபாவளி: சில நிமிஷங்களில் முடிவடைந்த ரயில் பயண முன்பதிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைந்தது. அக்.17 ரயில் பயணச் சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) க... மேலும் பார்க்க

தாமதமின்றி புதிய மின் இணைப்புகளை வழங்க உத்தரவு

நீண்டகால மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத் திட்டங்களை விரைந்து முன்னெடுப்பதுடன், தாமதம் இன்றி புதிய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத... மேலும் பார்க்க