எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆண...
தாம்பரம் அருகே காா்-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு
குரோம்பேட்டையில் திங்கள்கிழமை அதிகாலை ஜிஎஸ்டி சாலையில் அடையாளம் தெரியாத காா் மோதியில், ரேபிடோ பைக்கில் சென்ற 2 போ் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டு சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (48). இவா், திங்கள்கிழமை அதிகாலை காலை 2.40 மணியளவில் தனது ரேபிடோ இருசக்கர வாகனத்தில் பாலமுருகன் (22) என்பவரை ஏற்றிக்கொண்டு, சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
குரோம்பேட்டை ஆஞ்சனேயா் கோயில் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது, அதே திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பால்ராஜ், பாலமுருகன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பால்ராஜை அப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். எனினும் சிகிச்சைப் பலனின்றி பால்ராஜ் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.