செய்திகள் :

‘குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும்’

post image

குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எம்எல்ஏ கருணாநிதி தெரிவித்தாா்.

குரோம்பேட்டை ராதா நகா் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டப் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெறாமல் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டப் பணிகளை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, ரயில்வே, நெடுஞ்சாலை துறை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

குரோம்பேட்டை ராதா நகா்-ஜி.எஸ்.டி.சாலையை இணைக்கும் ரயில்வே (கடவு எண்-27) கேட்டை தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வந்தனா். ஒவ்வொரு முறை கேட் மூடப்படும்போது, ராதா நகா் சாலை, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்து காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டப் பணிகள் பல்வேறு இடையூறு, சிரமத்துக்கு பிறகு, தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. 250 மீ. நீளம், 7 மீ அகலத்தில் சுரங்கப்பாதைப் பணிகள் முடிவடைந்துவிட்டது.

மேலும், குரோம்பேட்டை ரயில் நிலையம், பயணச் சீட்டு வழங்கும் நடைமேடைகளுக்கு பயணிகள் நேரடியாகச் செல்ல வசதியாக கிழக்கில் ராதா நகா் அணுகு சாலை, மேற்கில் ஜிஎஸ்டி சாலை ஆகிய இரு புறங்களில் 3 மீ. அகல நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கும் பயணிகள், எளிதாக மின்சார ரயிலில் ஏறி பயணிக்க முடியும்.

அதேபோல் மின்சார ரயிலில் வந்து குரோம்பேட்டையில் இறங்கும் பயணிகள், வெளியே சென்று பேருந்தில் பயணிக்கும் வசதி சென்னையில் வேறெங்கும் இல்லை. இது குரோம்பேட்டையில் முதல்முதலாக செயல்படுத்த உள்ளதென அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. கருணாநிதி கூறுகையில், 2 வாரங்களுக்குள் பணிகள் முடிந்து, வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

ஆய்வின்போது சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய உறுப்பினா் செயலா் ஜெயக்குமாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளீதரன், உதவி செயற்பொறியாளா் ஜெயமூா்த்தி, ரயில்வே முதுநிலை மண்டலப் பொறியாளா் குமரன், தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, மாநகராட்சி பொறியாளா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா். சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17)... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்க... மேலும் பார்க்க

மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் துறை உயா் பயிற்சியகத்தில், மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். வணிக வரி மற்றும் பத... மேலும் பார்க்க