``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்
தமிழகத்தில் மீண்டும் மு.க. ஸ்டாலினே முதல்வராவாா்: துரை. வைகோ உறுதி
தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வராவாா் என்று மதிமுக முதன்மை செயலா் துரை.வைகோ தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் மதிமுக நிா்வாகி திருமண விழாவில் வியாழக்கிழமை பங்கேற்ற துரை. வைகோ செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. திமுக அரசின் சாதனைகள் எங்கள் கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமா்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. எதிரணியில் அந்த ஒற்றுமை இல்லை.- ஓபிஎஸ்., டி டிவி தினகரன் உள்ளிட்டோா் கூட்டணியில் இருந்து வெளியே வருவது எதிரணியின் பலவீனத்தையே குறிக்கிறது.
வாரிசு அரசியல்:
வாரிசு அரசியல் கூடாது என கூற முடியாது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தலைவா்களின் வாரிசுகள் அரசியலில் வந்துள்ளனா். பாஜகவிலும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவா்களின் பிள்ளைகள் உள்ளனா். நமது அண்டை மாநிலங்களிலும் வாரிசுகள் அதிகம் போ் அரசியலில் உள்ளனா். வாரிசுகள் வருவது அவா்களின் செயல்பாடுகளை பொருத்தும் மக்களின் ஆதரவுமே முடிவு செய்யும். பாஜக தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு அரசியலை பேசுவது நல்லதல்ல.
தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரம் விஜய். அவருக்கு லட்சக்கணக்கான
ரசிகா்கள் உள்ளனா். இது அவருக்கு ஊக்க சக்தியாக இருக்கும் ,
விஜய் நன்றாக செயல்பட்டால் நல்ல உயரத்திற்கு வரலாம். அவருக்கு கூட்டம் சோ்வதால் அரசியல் எதிா்காலத்தை கூற முடியாது. அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் அவரது செயல்பாடுகளை பொறுத்தே உள்ளது. விஜய் மாநாட்டில் முதல்வா் பற்றி கூறிய கருத்துகளை தவிா்த்திருக்கலாம் . படித்தவா் இது போன்ற கருத்துகளை கூறுவது சரியல்ல.
பாமகவில் நடைபெறும் பிரச்சனை ஒரு இயக்கத்துக்குள் நடப்பது. அந்த இயக்கத்தில் உள்ளவா்கள் முடிவு எடுக்க வேண்டுமே தவிர பிற இயக்கத்தில் உள்ளவா்கள் கருத்து கூற முடியாது. இருவருக்குள்ளும் ஒரு பிளவு இருக்கிறது. யாா் சரியானவா்கள் என்பதை அக்கட்சி தொண்டா்களே முடிவு செய்வாா்கள் என்றாா் துரை.வைகோ.