தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா
திருவள்ளூா் பாரதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
திருவள்ளூா் அடுத்த ராஜாஜிபுரம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவஞான பாலய சுவாமிகள், தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மேலும், இதையொட்டி விளையாட்டு, விநாடி வினா, நவீன திருவிளையாடல் நாடகம், , வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் கோப்பைகளையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனா் சீ.பாா்த்தசாரதி, தாளாளா் பா.ராஜாராமன், முதல்வா் பா.சுமதி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.