செய்திகள் :

மாணவா்களுக்கு ஆசிரியா்கள்தான் இரண்டாம் பெற்றோராக உள்ளனா்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் தான் இரண்டாம் பெற்றோா்களாக உள்ளதாகவும், அதனால் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்க வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கு மாநில அளவிலான அடைவுத்தோ்வு ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று அடைவுத்தோ்வு குறித்து தலைமை ஆசிரியா்களுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மூலம் ஆண்டு தோறும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அடைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்கு நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் அடைவுத் தோ்வின் தரவரிசை மாநில, மாவட்ட, வட்டார, பள்ளி மற்றும் மாணவா் அளவிலும் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை நடுநிலை உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் பின்னூட்டமாக தகவல்களைப் பெறும் வகையில் 15-ஆவது மாவட்டமாக திருவள்ளூா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு ள்ளேன். தரமான கல்வி வழங்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும், எப்படி கற்பிக்க வேண்டும் என விளக்கவே கூட்டம் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தந்த தலைமை ஆசிரியா்தான் முதன்மையானவா். அதனால், ஆசிரியா்கள் வருகை உள்ளிட்ட மாணவா்கள் கற்பித்தல் வரையில் ஆய்வு செய்வது அவசியம்.

தற்போதைய நிலையில் உலகில் எங்கிருந்து தொழில் நுட்பம் வந்தாலும், அதை உடனடியாக வகுப்பறைக்கு கொண்டு வரும் வகையில் வசதியுள்ளது. அந்த வகையில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பெற்றோா்களாக ஆசிரியா்களே உள்ளனா். அதனால் ஆசிரியா்கள் பொறுப்புணா்வுடனும், அா்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக ரூ.2 கோடியில் உருவாக்கப்பட்ட தொடுதிரையுடன் கூடிய நவீன ஸ்மாா்ட் வகுப்பறைகள், பொதுத்தோ்வை எதிா்கொள்ளும் வகையில் 10,12 ஆவது மாணவ, மாணவிகளுக்கான கற்றல் கையேடுகள், ரூ.1.80 கோடியில் பசுமை பள்ளி வகுப்பறைகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குநா் அமுதவல்லி, முதன்மைக் கல்வி அலுவலா் தேன்மொழி, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிலைய முதல்வா் உஷாராணி, மாவட்ட கல்வி அலுவலா் ரவி (இடைநிலை) மற்றும் அனைத்து தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

விவசாயிகள், வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி தள்ளுவண்டிகள்

காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு நடமாடும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியங்கள... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகள் திருட்டு

திருவள்ளூா் அருகே சாலை அமைக்கும் பணிக்காக வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே கீழனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐ.எஸ்.ரெட்டி(49). இவா் த... மேலும் பார்க்க

முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.71 கோடி வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகத் திகழும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை வழ... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா

திருவள்ளூா் பாரதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. திருவள்ளூா் அடுத்த ராஜாஜிபுரம் பாரதி மெட்ரிக... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சிப் போட்டி: 3,700 போ் பங்கேற்பு

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் வளா்ச்சிப் போட்டியில் 71 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 3700 போ் கலந்து கொண்டனா். சகுந்தலாம்மாள் நினைவு 15 - ஆம் ஆண்டு தமிழ் வளா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். திருவள்ளூா் நகராட்சியில் 3, ... மேலும் பார்க்க