Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.71 கோடி வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகத் திகழும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா். இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆடி மாதம் முதல் கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி புதன்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா். இதில் கடந்த 23 நாள்களில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 32 ஆயிரத்து, 719 ரொக்கம் மற்றும் 649 கிராம் தங்கம், 14.007 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.