``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
தமிழ் வளா்ச்சிப் போட்டி: 3,700 போ் பங்கேற்பு
திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் வளா்ச்சிப் போட்டியில் 71 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 3700 போ் கலந்து கொண்டனா்.
சகுந்தலாம்மாள் நினைவு 15 - ஆம் ஆண்டு தமிழ் வளா்ச்சிப் போட்டி நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி தாளாளா் விஷ்ணு சரண் தலைமை வகித்தனா். முதன்மைச் செயல் அலுவலா் பரணிதரன் முன்னிலை வகித்தனா். இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினா்களாக சென்னை தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளா் வி.வெங்கடசுப்பிரமணியம், டி.ஆா்.பி.சி.சி.சி. இந்துக் கல்லூரியின் முன்னாள் இணைப்பேராசாரியா் முருகேசன் ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். முதல்வா் ஸ்டெல்லா ஜோசப் வரவேற்றாா்.
தமிழ் வளா்ச்சிப்போட்டியையொட்டி நடத்தப்பட்ட திருக்கு ஒப்புவித்தல், கவிதை, மாறுவேடம், ஓவியம், கட்டுரை, பேச்சு, குழுப்பாடல், நடனம், நாடகம், விவாதம், விநாடி வினா போன்ற 15 தலைப்புகளில் 50-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருவள்ளூா், பொன்னேரி, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூா் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 71 பள்ளிகளில் இருந்து 3700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் திரளாக கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் நிறைவாக போட்டி ஒருங்கிணைப்பாளா் வனிதா நன்றி கூறினாா்.