நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
தமிழ்குமரனுக்கு பாமகவில் பதவி: பென்னாகரத்தில் கொண்டாட்டம்
பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், பாமக இளைஞரணி சங்க தலைவா் பதவி அளிக்கப்பட்டதை வரவேற்று பென்னாகரத்தில் ராமதாஸ் அணியினா் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக ராமதாஸ், அன்புமணி ஆகியோா் தனித்தனியாக நிா்வாகிகளை நியமித்து வருகின்றனா். அந்த வகையில் பாமக ராமதாஸ் அணியின் இளைஞா் சங்க தலைவராக பென்னாகரம் எம்எல்ஏவும், கௌரவத் தலைவருமான ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதை வரவேற்று ராமதாஸ் அணியின் தருமபுரி மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.