பவுனுக்கு ரூ.87,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோதூா் அஞ்சல், மேக்னாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கா.அருள்குமாா் (33). தொழிலாளியான இவா் 9-ஆம் வகுப்பு படித்து வந்த 14-வயது சிறுமியை கடந்த 19.05.2019 அன்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், தருமபுரி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா். தொடா்ந்து, இது தொடா்பான வழக்கு தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது.
இரு தரப்பு விசாரணைகள், வாதி, பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம் உறுதியானதையடுத்து அருள்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 13,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா்.