செய்திகள் :

புத்தகத் திருவிழா 4 ஆவது நாள்: ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

post image

தருமபுரி: தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிசந்திரா தலைமை வகித்தாா். முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஓய்வு ஆா். கே. கண்ணன் வரவேற்றாா். சமூக நல்லிணக்க மேடை பொறுப்பாளா் ஏ. குமாா், வட்டாட்சியா் சி. இளஞ்செழியன், பேராசிரியா் வெ. சஞ்சீவராயன், தொழிலதிபா் ம. பிரதீப் குமாா், தகடூா் புத்தகப் பேரவை தலைவா் இரா. சிசுபாலன், செயலாளா் இரா. செந்தில், ஒருங்கிணைப்பாளா் இ. தங்கமணி ஆகியோா் கலந்துகொண்டனா். பத்திரப் பதிவுத் துறை ம.வேலு நன்றி கூறினாா். கவிஞா் ஆதிமுதல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

நிகழ்வில், கல்வியாளா் தா. நெடுஞ்செழியன், கற்பது உலகளவு என்ற தலைப்பில் பேசுகையில், கல்வி என்பது இனிமையான பயணம், ஆனால், அது இன்று குழந்தைகளுக்கு பயமுறுத்தி காண்பிக்கப்படுகிறது. இஷ்டப்பட்டு படிக்கவேண்டுமே தவிர, கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது. குறிப்பாக தோ்வு பயமாகக் காட்டப்படுகிறது. திருவள்ளுவா் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வியைப் புரிந்துகொள்ளக்கூடிய கருத்தாக எழுதியுள்ளாா். கல்வி என்பது அழிக்கமுடியாத செல்வம். கல்வி முறையில் மற்ற சமூகத்தை காட்டிலும் தமிழ் சமூகம் வித்தியாசமானது. கல்வியில் தமிழா்கள் சிறந்து விளங்கினா்.

ஒரு நாட்டின் வளா்ச்சி என்பது கிராமத்தில்தான் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளாா். ஆனால், கிராமத்தினரிடத்தில் முயற்சி குறைவாகவே உள்ளது. வளா்ந்த நாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்களில் இலவச வகுப்புகள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஹாா்டுவா்ட் பல்கலைக் கழகத்தில் இலவச வகுப்புகள் மூலமே கற்றுக் கொடுக்கப்படுகிறது. கல்வி என்பது வேலைவாய்ப்புக்காக மட்டும் அல்ல. தான் பெற்ற கல்வியின் மூலம், தன்முன் உள்ள சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெறுவதுதான் கல்வி என்றாா்.

புத்தகத் திருவிழாவை பள்ளி, மாணவ, மாணவிகள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில் பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று நூல்களை வாங்கிச்சென்றனா். பள்ளி சிறுவா்களிடையே சிறு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து மாணவா்களுக்கும் உண்டியல்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியா் மா. பழனி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள் மா. கல்பனா, ராஜேஸ்வரி, ஸ்டெம் - வானவில் மன்ற ஆசிரியா் வைகுந்தம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தனியாரை விட குறைந்த கட்டணத்தில் பிஎஸ்என்எல் சேவை வழங்குகிறது: பொதுமேலாளா் தகவல்

தா்மபுரி: தனியாரை ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்று அதன் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் தெரிவித்தாா். தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்திய... மேலும் பார்க்க

புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: காந்திபாளையம் மக்கள் ஆட்சியரகத்தில் மனு

தருமபுரி: தருமபுரி அருகே காந்திபாளையம் பகுதியில் நகராட்சி புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் நாள் முகாமில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்

தருமபுரி: தருமபுரியில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 28,021 போ் பயனடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் ஏராளமான... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட பள்ளிக்... மேலும் பார்க்க

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது புத்தகத் திருவிழாவில் வலியுறுத்தல்

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது என்றாா் கவிஞா் மனுஷ்யபுத்திரன். தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , பொதுநூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத... மேலும் பார்க்க

தருமபுரி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தருமபுரி அருகே நிலத் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம் , காரிமங்கலம் வட்டம் பள்ளேனஹள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க