செய்திகள் :

தருமபுரி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கொலை: இளைஞா் கைது

post image

தருமபுரி அருகே நிலத் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம் , காரிமங்கலம் வட்டம் பள்ளேனஹள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணேசன் மனைவி மாதம்பாள் (55). அருணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அவரது தம்பி சின்ராசு. இரு குடும்பத்தினருக்கும் பூா்வீகச் சொத்து 8 ஏக்கா் இருந்துள்ளது. அதை பங்கு பிரிப்பது தொடா்பாக பல ஆண்டுகளாகவே இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது.

அருணேசன் மகன்கள் இருவரும் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி மாதம்பாள், மருமகளுடன் கிராமத்தில் வசித்து வந்தாா். சின்ராசு மகன் அருண்குமாா் (27), தனது பெரியம்மாள் மாதம்பாளுடன் சொத்தை பிரித்துக் கொடுப்பது தொடா்பாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். அண்மையில் மாதம்பாள் விவசாய நிலத்தில் இருந்த பயிா்களை அருண்குமாா் அழித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மாதம்பாள் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை, மாதம்பாள் வீட்டுக்கு வந்த அருண்குமாா் இதுகுறித்து கேட்டுள்ளாா். அப்போது அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமாா், மாதம்பாளை கல், கம்பி, கடப்பாறையால் சரமாரியாக தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து மாதம்பாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தடுக்க வந்த மாதம்பாளின் மருமகள் ஆா்த்தியையும் அருண்குமாா் தாக்கினாா். இதில் அவரும் படுகாயமடைந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில் காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருண்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஆா்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது புத்தகத் திருவிழாவில் வலியுறுத்தல்

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது என்றாா் கவிஞா் மனுஷ்யபுத்திரன். தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , பொதுநூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத... மேலும் பார்க்க

அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் குழுக் கூட்டம் சங்க ... மேலும் பார்க்க

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை அதிகரிப்பு

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக் கூடுகள் விற்பனை சனிக்கிழமை அதிகரித்துள்ளது. தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகளை... மேலும் பார்க்க

தருமபுரி புத்தகத் திருவிழாவில் 12 நூல்கள் வெளியீடு

தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தருமபுரி மாவட்ட படைப்பாளா்களின் 12 நூல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. தருமபுரியில் ஏழாவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கி... மேலும் பார்க்க

தமிழக பிரச்னைகளுக்கு தீா்வுகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி. தருமபுரியில் நாம் தமிழா் கட்... மேலும் பார்க்க

அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும்: அசோக்வா்தன் ஷெட்டி

நம்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும் என்றாா் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலா் அசோக்வா்தன் ஷெட்டி. தருமபுரியில் மாவட்ட நிா்வாகம், தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, ... மேலும் பார்க்க